டெல்லியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.47 லட்சத்தை நெருங்கவுள்ளது!
டெல்லியில் மேலும் 1,200 பேருக்கு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,62,527 ஆக உயர்ந்துள்ளது. அதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,313 ஆக உள்ளது.
மேலும் 1,200 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,46,588 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி 11,626 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.