தேசிய கொடியை அவமதித்த வழக்கு – எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரிய மனு ஒத்திவைக்கப்பு

Default Image

தேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதனிடையே தேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது எஸ்.வி.சேகர் தரப்பில், காந்தியடிகள் கூறியிருந்த கருத்தையே  கூறியதாக  தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு ஆஜரான சேகரை 28 ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக  வாதங்களைக் கேட்ட நீதிமன்றம் , மனுவுக்குப் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின்  வசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy