இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்காக செய்த செயல் …!ஷூட்டிங்கை ரசிகர்களுக்காக விட்டு கொடுத்த தளபதி விஜய் …..
இளைய தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில்
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முழு ஸ்ட்ரைக்கிலும் சிறப்பு அனுமதி பெற்று ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை சென்டரல் ரயில் நிலையம் அருகில் ஷூட்டிங் நடைபெற்று வருவதை அறிந்த விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இதனையடுத்து, ரசிகர்கள் காத்திருப்பதை அறிந்த விஜய் வெளியில் வந்து கையை அசைத்து விட்டு சென்றுள்ளார்.இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோசம் அடைந்து இதை தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.