50 % இடஒதுக்கீடு வழக்கு – மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
50 % ஒபிசி இடஒதுக்கீட்டை நடப்பாண்டே அமல்படுத்த கோரிய அதிமுகவின் மேல்முறையீட்டு மனுவில் மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் கூறியது.
இதன் பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாமென தெரிவித்தது. மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் எனவும், இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இதனால் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தது. உயர்நீதிமன்றஉத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியது தமிழக அரசு.
ஏற்கனவே ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறபிக்க கூடாது என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதன் பின்னர் ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்தக் கோரி அதிமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது , இது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இதே விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு உடன் இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.