120கி.மீ தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு மனைவியை சைக்கிளில் அழைத்து சென்ற கணவர்.!
கடந்த மார்ச் மாதத்தில் புற்றுநோயின் வலியால் அவதிப்பட்டு வந்த தனது மனைவியை கணவர் சைக்கிளில் அமர வைத்து 120 கி. மீ தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை அடுத்து, தற்போது அந்த பெண்மணி மரணமடைந்துள்ளார்.
தஞ்சாவூர் கும்பகோணத்தில் உள்ள மகாராஜபுரம் மணல்மேட்டு ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி அறிவழகன் (60). இவரது 2வது மனைவியான மஞ்சுளாவிற்கும் (39), அறிவழகனுக்கும் 12வயதில் மனவளர்ச்சி குன்றிய ஒரு மகன் உள்ளார் . இந்த நிலையில் மனைவி மஞ்சுளா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை கடந்த 9 மாதங்களுக்கு பெற்று வீடு திரும்பியுள்ளார்.
அதனையடுத்து கொரோனா ஊரடங்கு சமயத்தில் வலியால் அவதிப்பட்டு வந்த மஞ்சுளாவை அறிவழகன் கடந்த மார்ச் 29ம் தேதி தனது சைக்கிளில் வைத்து கும்பகோணத்தில் இருந்து 120கி.மீ தொலைவில் உள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்ற சம்பவம் சமூக ஊடகங்களில் பரவ அறிவழகனின் அன்பை பலர் பாராட்டியதோடு, பணம், பொருள் கொடுத்து உதவினார் முன்வந்தனர். மருந்து, மாத்திரைகளில் வாழ்ந்து வந்த மஞ்சுளா நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தனது மனைவியின் இறப்பு குறித்து அறிவழகன் கூறுகையில் , பலரிடம் பணம் கடன் வாங்கியும், பலர் உதவியும் மனைவிக்கு மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்து கவனித்தேன். இருப்பினும் அவரை என்னால் காப்பாற்ற முடியாமல் போனது என்று மனமுடைந்து கூறியுள்ளார்.