பணத்திற்காக உறவினர் மகனை கடத்தியவர் கைது..!
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் வசித்து வந்தவர் முபாரக் இவர் அப்பகுதியில் இறைச்சிக் கடை ஒன்று வைத்துள்ளார் இவருக்கு ஷபியா என்ற மனைவி உள்ளார் மேலும் இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர் இந்நிலையில் இவருடைய கடைசி மகனான அசாருதீன் நேற்று மதியம் வீட்டிற்கு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முபாரக் அக்கம் பக்கத்தில் தனது குழந்தையை தேடியுள்ளார், அப்பொழுது குழந்தை கிடைக்கவில்லை மேலும் திடீரென அப்பொழுது முபாரக்கிற்கு ஒரு மர்ம நபர் ஒருவர் கால் செய்து குழந்தையை கடத்தி விட்டதாகவும் குழந்தை வேண்டுமென்றால் 1 கோடி ரூபாய் கொடுத்தால் உயிருடன் ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முபாரக் அப்பகுதியிலுள்ள காவல்துறைக்கு இதுகுறித்து புகார் அளித்தார், புகாரை ஏற்ற காவல்துறையினர் குழந்தையை தேடி வந்தனர் அப்பொழுது போலீஸ் தேடும் தகவலை அறிந்த மர்ம நபர் குழந்தையை கூட்ரோட்டில் தனியாக இறக்கி விட்டு காரில் சென்றார் .
மேலும் தனியாக நின்று அழுது கொண்டிருந்த கொண்ட குழந்தையை பிரியாணி கடை உரிமையாளர் ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார், மேலும் போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் மேலும் முபாரக்கிற்கு போன் செய்த மர்ம நபர் சிக்னலை வைத்து காவல்துறையினர் அந்த மர்ம நபரை பிடித்தனர் விசாரணையில் அவர் பெயர் சுலைமான் என்றும் முபாரக் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வசித்து வருவதும் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சுலைமான் முபாரக்கின் தாய்மாமன் மகன் இவரும் இறைச்சிக்கடை நடத்திவருகிறார், மேலும் தனக்கு ரூ.10 லட்சம் கடன் இருப்பதால் கடனாக பணம் கேட்டால் தரமாட்டார்கள் என்பதால் இப்படி பணம் கேட்டு கடத்தல் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார், மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.