தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாதர் சங்கத்தினர்…!!
தூத்துக்குடி மாநகர் 48 வார்டுஇந்திரா நகர் பகுதி மக்களுக்கு மூன்று ஆண்டுகாலமாக இலவசவேட்டி சேலை வழங்காததை கண்டித்தும் புழுங்கல்அரிக்கு பதிலாக பச்சை அரிசி வழங்குவதை கண்டித்தும் தூத்துக்குடி வட்டாட்சியர்
அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநகர துணைதலைவர் காந்திமதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் பி.பூமயில் மாவட்டதுணைத்
தலைவர் மு கமலம், மாநகரதலைவர் காளியம்மாள், உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது கோரிக்கை களை உடணடியாக நிறைவேற்ற உறுதியளித்தார்.