புதிய கல்விக் கொள்கை – இன்று முதல் கருத்து தெரிவிக்கலாம்
இன்று முதல் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது.
மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய பள்ளிக்கல்வி செயலாளர் அனிதா கார்வால் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் , புதிய கல்விக் கொள்கை தொடர்பாக இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் / பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் கருத்துகளை https://innovateindia.mygov.in/nep2020/ என்ற இணையம் மூலம் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.