தல அஜித் வாக்கு ..!சொன்னவுடன் நடந்த அதிசயம்…!விசுவாசம் லீக் ?
அஜித் நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் நடிக்கும் ‘விசுவாசம்’.இந்த படத்தின் படப்பிடிப்பு சினிமா ஸ்டிரைக் முடிந்ததும் துவங்கவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.
இப்படத்துக்காக ஹைதராபாத்தில் பல கோடி செலவில் செட் போடப்பட்டுள்ளது.படப்பிடிப்பு தள்ளிப்போனதால் வாடகையாக தினமும் பல லட்சங்கள் விரயமாகிக் கொண்டிருக்கின்றன.இதனால் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பை துவங்க சிறப்பு அனுமதி கேட்டார் தயாரிப்பாளர்.
ஆனால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.அஜித், நயன்தாரா நான்காவது முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆர்.கே.சுரேஷும் சின்ன வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் மூலம் அஜித்துடன் முதன் முதலாக இணைந்துள்ள இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கான ட்யூன்களை உருவாக்கி வருகிறார். இதுவரை படத்தின் அத்தனை பாடல்களையும் ரெடி பண்ணிவிட்டார்.
இந்நிலையில் இந்த படத்தில் டி.இமானுடன் பிரபல கிட்டார் இசைக் கலைஞரான கெபா ஜெரோமியாவும் பணியாற்றுகிறார்.விசுவாசம் படத்திற்காக அவர் சில சில ட்யூன்களை ரெடி செய்துள்ளார்.இந்த தகவலை கெபா ஜெரோமியாவே ட்வீட் செய்திருந்தார்.இந்த தகவல் வெளியாகி வைரலான நிலையில், கெபா ஜெரோமியாவின் அந்த ட்வீட் திடீரென்று டெலிட் செய்யப்பட்டது.தல அஜித்தின் அறிவுறுத்தல் காரணமாகவே ட்வீட் டெலிட் செய்யப்பட்டதாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.