வாழ்க குடிமக்கள்! ஊரடங்கு அச்சத்தால் நேற்றே 250 கோடிக்கு விற்பனையாகியுள்ள மது – ராமதாஸ்!
நேற்றே 250 கோடிக்கு மது விற்பனை தமிழகத்தில் நடந்துள்ளதால் வாழ்க குடி மக்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் அண்மையில் திறக்கப்பட்டு பல கோடிக்கணக்கில் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டிலுள்ள பெண்கள் எப்படி ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான பொருள்களை சனிக்கிழமை இரவே வாங்கி வைக்கிறார்களோ, அதுபோலவே ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான சரக்குகளை மதுபான பிரியர்கள் சனிக்கிழமை வாங்கி வைத்துவிடுகிறார்கள்.
இந்நிலையில் தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில். வாழ்க குடிமக்கள் தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 250 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இன்று முழு ஊரடங்கு என்பதால் குடிமக்கள் நேற்றே போட்டி போட்டு மது வாங்கியதால் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாழ்க குடிமக்கள்! வளர்க தமிழ் நாடு! என ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
வாழ்க குடிமக்கள்!?!?!?!
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.250 கோடிக்கு மதுவிற்பனை. இன்று முழு ஊரடங்கு என்பதால் குடிமக்கள் நேற்றே போட்டி போட்டு மது வாங்கியதால் விற்பனை அதிகரிப்பாம்.
வாழ்க குடிமக்கள்! வளர்க தமிழ்நாடு!— Dr S RAMADOSS (@drramadoss) August 23, 2020