இன்னும் 73 நாட்களில் இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி!

Default Image

இன்னும் 73 நாட்களில் இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதல் முறையாக ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்து உபயோகபடுத்த ஆரம்பித்து விட்டோம் என்ற நற்செய்தியும் அண்மையில் கூறியிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் மூன்று விதமான தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடித்துள்ள கோவில்ஷீட் எனும் தடுப்பூசி இன்னும் 73 நாட்களில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீராம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அதிகாரி இது குறித்து பேசுகையில், அரசால் சிறப்பு தயாரிப்பு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விரைவாக இன்னும் 58 நாட்கள் பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டு 73 ஆவது நாட்களுக்கு பிறகு தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார். மூன்று கட்டமாக நடத்தப்படும் இந்த பரிசோதனைகள் அதிக அளவில் மும்பை, புனே ஆகிய நகரங்களில் நடப்பதாக தெரிகிறது. தடுப்பு மருந்துகள் விற்பனைக்கு விடப்பட்ட உடன் அரசு நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்