பேரன் திருமணத்துக்காக பலகாட்டிலிருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பயணித்த தாத்தா பாட்டி!

Default Image

பேரனின் திருமணத்திற்காக  பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் பாலக்காட்டில் இருந்து வந்த தாத்தா பாட்டியின் அசத்தலான செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

தொலைதூர பயணம் என்றாலே கார்கள் அல்லது பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். ஆனால் தற்பொழுது கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவை சேர்ந்த வயதான கே என் லட்சுமி நாராயணன் மற்றும் சரஸ்வதி ஆகிய வயதான தம்பதியினர் தனது பேரனின் திருமணத்திற்கு பாலக்காட்டில் இருந்து பெங்களூர் வருவதற்கு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள எண்ணி ஹெலிகாப்டரில் ஆகாயமார்க்கமாக பறந்து வந்துள்ளனர். கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்த 90 வயதான லட்சுமிநாராயணன் பேரனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக 85 வயதான தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்துள்ளார்.

அவர்களின் மகனும் தனது அப்பா அம்மாவுக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அவர்களது பயணத்தை இனிமையாக்கியுள்ளார். நாங்கள் எங்கள் பேரன் டாக்டர் சந்தோஷம் திருமணத்தில் கலந்து கொள்ள விரும்பினோம், சாலையில் பயணம் செய்வது மிகவும் சிரமம் என்பதால் மகன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான். எங்களுக்கு இந்த வயதில் கூட ஹெலிகாப்டரில் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்திருப்பது நினைத்து அதிர்ஷ்டமாக கருதுகிறேன், இதுதான் எங்களது முதல் வான் வழி பயணம் கூட என அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பேரன் திருமணத்தை முடித்துவிட்டு நாளை மீண்டும் இவர்கள் ஹெலிகாப்டரில் ஊர் திரும்ப உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்