ரஷ்யாவே முழுபொறுப்பு..!உளவுத்துறை அதிகாரி மீதான ரசாயனத் தாக்குதல் விவகாரம் …!
ஐரோப்பிய யூனியன்,பிரிட்டனில் ரஷ்ய முன்னாள் உளவுத்துறை அதிகாரி மீதான ரசாயனத் தாக்குதலுக்கு ரஷ்யாவே முழுபொறுப்பு என கூறியுள்ளது. பிரிட்டனுடன் ரகசிய தகவல்களை பகிர்ந்துகொண்டதாக சிறைத் தண்டனை வழங்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட ரஷ்ய முன்னாள் உளவு அதிகாரி செர்ஜி ஸ்கிரிபால் லண்டனில் வசித்து வருகிறார்.
ஸ்கிரிபால் அவரது மகள் யுலியா ஆகியோரை ரசாயன விஷம் கொடுத்து கொல்ல முயற்சி நடைபெற்ற நிலையில் அவர்கள் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற 28 நாடுகளின் கூட்டத்துக்குப் பின் பேசிய ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்டு டஸ்க் பிரிட்டனின் விளக்கத்தை விட வேறு நம்பகமான விளக்கம் இருக்க முடியாது என்றும் தாக்குதலுக்கு ரஷ்யாவை பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.