இலங்கையில் அங்கொட லொக்காவின் மேலும் ஒரு கூட்டாளி என்கவுன்டர்..!

Default Image

இலங்கையின் நிழல் உலக தாதா என கூறப்படும் அங்கொட லொக்கா கடந்த 2018-ம் ஆண்டு முதல் கோவையில் உள்ள சேரன்மாநகர் பகுதியில் தங்கி உள்ளார். கடந்த மாதம் 3-ம் தேதி அங்கொட லொக்கா மாரடைப்பால் உயிரிழந்தார்.

அங்கொட லொக்காவின் உடலை அவரது காதலி அம்மானி தான்ஷி, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் மதுரையில் போலி ஆவணங்கள் வைத்து ஆதார் அட்டை தயாரித்து உடலை எரித்தனர்.

போலியான ஆவணங்கள் மூலம் உடலை எரித்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால், இந்த வழக்கு பீளமேடு போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அங்கொட லொக்கா காதலி அம்மானி தான்ஷி, சிவகாமி சுந்தரி மற்றும் தியானேஸ்வரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 இந்நிலையில், அங்கொட லொக்காவின் கூட்டாளி சமியாவை போலீசார் நேற்றிரவு என்கவுண்ட்டரில்  சுட்டுகொன்றனர். இதற்கு முன் கடந்த 12-ம் தேதி அசித்த ஹேமதிலக்க என்ற கூட்டாளி என்கவுண்டர் செய்யப்பட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டில் கடுவேலா மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ‘சாமியா’ நேரடியாக ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும்,   2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைச்சாலைத் துறை பேருந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ‘சாமியா’ நேரடியாக ஈடுபட்டார். சிறைச்சாலை பஸ் மீதான தாக்குதலில் 5 கைதிகள் , 2 சிறை அதிகாரிகளும்  உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்