உயிருக்கு போராடி வரும் ரஷியா எதிர்கட்சி தலைவர்..!
ரஷியாவின் “எதிர்கால ரஷியா” கட்சியின் தலைவர் அலெக்சி நவல்னி. அதிபர் புதினின் ஆட்சிக்கு எதிராக போராடி வருபவர்களில் முக்கிய தலைவரான அலெக்சி நவல்னி கருதப்படுகிறார். இவரது போரட்டம் காரணமாக பல முறை சிறைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை விமானம் மூலம் அலெக்சி நவல்னி மாஸ்கோ சென்று உள்ளார். அப்போது, விமானம் நடுவானில் சென்றபோது திடீரென அவருக்கு அதிகம் வியர்க்கத் தொடங்கியது. பின்னர்அவர் சுயநினைவு இழந்தார்.
இதனால், விமானம் அவசரமாக ஓம்ஸ்க் நகரில் தரை இறங்கியது. இதைத்தொடர்ந்து, அலெக்சி நவல்னி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
அலெக்சி நவல்னி விமான நிலையத்தில் நவல்னி டீ சாப்பிட்டதாகவும், அந்த டீயில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டு இருக்கலாம் என நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பின் அதிபர் புதினின் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் கூறுகின்றனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலம் தாக்கியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.