ஆகஸ்ட் 26 முதல் கேரளாவில் பிரபல கோவில் தரிசனத்திற்காக திறப்பு.!
ஆகஸ்ட் 26 முதல் உரிய வழிகாட்டு நெறிமுறைகளோடு கேரள பத்மநாபசுவாமி கோவில் பகதர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது.
கேரளாவில் புகழ் பெற்ற பத்மநாப சுவாமி கோவில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட உள்ளது. உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு நாள் முன்னதாக spst.in என்ற கோவிலுக்கு உரித்தான வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தரிசனத்திற்கு வருகையில் அதன் நகலை எடுத்து வர வேண்டும். மேலும், ஒரிஜினல் ஆதார் அட்டையை எடுத்து செல்லவேண்டும்.
பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். கோவிலுக்கு செல்வதற்கு முன் சோப்பு அல்லது சேனிடைசர் கொண்டு கை கழுவி விட்டு கோவில் உள்ளே செல்லவேண்டும். தரிசன நேரம் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.45 மணி வரையிலும் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு கட்டமாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஒருமுறை 35 நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 665 பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என நிர்வாக அதிகாரி ரத்தீசன் தெரிவித்துள்ளார்.