சென்னையில் கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் மீது வழக்குப் பதிவு !
சென்னையில் கனிஷ்க் நகை உற்பத்தி நிறுவன உரிமையாளர் பூபேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகழேந்தி என்பவருக்கு சொந்தமான ரூ.42 கோடி மதிப்பு நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக பூபேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகழேந்தியின் நிலத்தை வாங்குவதாக ஒப்பந்தம் செய்து, அந்த ஆவணம் மூலம் ரூ.42 கோடி கடன் பெற்று பூபேஷ் மோசடி செய்துள்ளார். பூபேஷ் மனைவி நீதா ஜெயின் மற்றும் கனிஷ்க் நிறுவனத்தின் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.