மும்பையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.35 லட்சத்தை கடந்துள்ளது!

மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பையில் ஓரே நாளில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,35,357 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அங்கு ஒரே நாளில் 1,101 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,09,369 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பை பொருத்தளவில், இன்று 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,385 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 17,697 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைககம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மருத்துவ சிகிச்சையில் அஜித்! காரணம் என்ன?
April 30, 2025