தமிழகத்தில் இ-பாஸ் குறித்து முதல்வர் முடிவெடுப்பார் – அமைச்சர் ஜெயக்குமார்.

தமிழகத்தில் இ-பாஸ் குறித்து முதல்வர் முடிவெடுப்பார்.

இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை என அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், ‘மாநிலங்களுக்கு இடையே தனிநபர் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்பதை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு முதல்வர் ஆலோசித்து அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.