ஆயுஷ் செயலர் கூறியது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி கடிதம்

மொழிரீதியாக பாகுபாடு காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு கனிமொழி கடிதம்.
யோகா மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இந்த பயிற்சியில் இந்தியா முழுவதும் உள்ள 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். இதில், தமிழகத்தை சேர்ந்த 37 பேர் கலந்துகொண்டனர். அப்போது, மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசினார்.
அந்நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் குறுக்கிட்டு ஆங்கிலத்தில் பேசும்படி தெரிவித்தனர். ஆனால், ராஜேஷ் கொடேஜா எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்று கூறி, இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் எதிரிப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என ஆயுஷ் செயலர் கூறியது பற்றி விசாரிக்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி, ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதில், மொழிரீதியாக பாகுபாடு காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
My letter to the Honorable Union Minister @shripadynaik on the reported hindi imposition.#StopHindiImposition pic.twitter.com/Wzlib2f9fl
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 22, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025