தஞ்சாவூர் அருகே இளைஞர் வெட்டி கொலை..!
தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை நேதாஜி காலனியில் வசித்து வந்தவர் பன்னீர் இவருடைய மகன் ராஜா, மேலும் ராஜா நேற்று நகர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார், அப்பொழுது அப்பகுதியில் 3 மிதிவண்டிகளில் மர்ம கும்பல்கள் வந்தது.
இந்நிலையில் அங்கு வந்த மர்ம கும்பல் ராஜை சரமாரியாக வெட்டி கொலை செய்தது, இந்த சம்பவத்தை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் கூறுகையில் முன் விரோதமாக இந்த கொலை நடந்தது என்று கூறுகின்றனர் மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.