நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது- இந்திய மருத்துவ கவுன்சில் பிரமாண பத்திரம் தாக்கல்.!
JEE மற்றும் NEET பொதுவாக ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
ஆனால், தற்போது இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்கள் கடந்த திங்கள்கிழமை தள்ளுபடி செய்யட்டப்பட்டது. ஆனாலும், மாணவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து தேர்வுகளை தள்ளி வைக்க கோரி வைத்தனர். இந்த சுழலில் நேற்று தேசிய தேர்வு முகமை JEE மற்றும் NEET ஆகிய தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவித்தது.
இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்றும், மேலும், மேலும் இந்தியாவுக்கு வெளியே நீட் தேர்வு மையங்களை அமைக்க ஏற்பாடு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய தேர்வு முகமை தொடர்ந்து தற்போது மருத்துவக் கவுன்சிலும் நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என அறிவித்துள்ளது.