சொன்னபடி கைலாச நாட்டு பொற்காசுகளை (நாணயங்கள்) வெளியிட்டார் நித்தியானந்தா.!
சொன்னது போலவே விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை (Kailashian Dollar) வெளியிட்டுள்ளார் நித்தியானந்தா
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியன்று அறிமுகம் செய்வதாக கூறியிருந்தார். விக்கி பீடியா போல தன்னை பற்றி அறிந்து கொள்ள நித்தியானந்தாபீடியா என்ற ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். இந்த பரபரப்புக்கு இடையே தனது கைலாசா நாட்டின் கரன்சியை பற்றி பேசியிருந்தார்.
அதாவது, கைலாசா நாட்டின் கரன்சி காஸ்ட்லியானது என்றும் முழுக்கவே பொற்காசுகள், ஆங்கிலத்தில் டாலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் சூட்டியுள்ளார். இந்து மதத்தை பின்பற்றும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என்றும் உள்நாட்டுக்கு ஒரு கரன்சி, வெளிநாட்டுக்கு மற்றொரு வகை கரன்சி என கூறியுள்ளார். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சொன்னது போலவே விநாயகர் சதுர்த்தியான இன்று கைலாசா நாட்டின் வர்த்தக நாணயங்களை (Kailashian Dollar) வெளியிட்டுள்ளார் நித்தியானந்தா.