கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381 – முதல்வர் பழனிசாமி
கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381.
தமிழகத்தின் தலைநகரான சென்னை அணைத்து வளங்களையும் கொண்ட ஒரு நகரம் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், இந்த சென்னை இன்று தனது 381-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
இந்நிலையில், முதலமைச்சர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று. கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை!’ என பதிவிட்டுள்ளார்.
வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!
கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381.
பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும்.
இது நம்ம சென்னை! #MadrasDay #Chennaiday pic.twitter.com/s2KjWuvNPd
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 22, 2020