அமெரிக்கா -சீனா மீண்டும் மீண்டும் மோதல் …!
சீனா மோதல் ….. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரி விதிப்பை அமெரிக்கா அதிகரித்துள்ளதால், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.ஜிஎப்எக்ஸ் இன் (gfx in) அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களை சீன நிறுவனங்கள் திருடி, அதே போன்று போலியான பொருட்களை தயாரித்து விற்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் ஆயிரத்து 300 பொருட்கள் மீதான இறக்குமதி வரியைஅதிகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்க தயாராகியுள்ள சீனா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி மற்றும் உலோகங்களுக்கான வரியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. வர்த்தகப் போர் முற்றும் பட்சத்தில், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து சுமார் 14 பில்லியன் டாலர் மதிப்பில் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தையும் ஏர்பஸ் நிறுவனத்திற்கு மாற்ற சீனா முடிவு செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.