தீராத வினையெல்லாம் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி உருவான வரலாறு இதோ…

Default Image

ஆவணி மாதம் சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகமும், மனித உடலும் கொண்டு சிவபெருமான் படைத்து, கஜமுகசுரனை அழிக்க அனுப்பி வைத்தார். இதனால் தான் அவனிமாதம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

புராணகாலத்தில் கஜமுகாசுரன் எனும் அரக்கன் சிவபெருமானிடம் வரம் பெற அவரை வேண்டி மேற்கொண்ட தவத்தின் பலனாய் சிவபெருமான் அருள் பெற்று, கஜமுகாசுரன் ஒரு வரம் பெற்றான். அந்த வரத்தின் படி, விலங்குகளால், மனிதர்களால், ஆயுதங்களால் அழிக்க முடியாத வரம் பெற்றிருந்தான். இந்த வரத்தை பெற்றப்பின் தேவர்களை பலவழிகளில் துன்புறுத்தி வந்தான்.

எனவே, தேவர்கள் ஒன்று திரண்டு சிவபெருமானிடம் இதனை கூறினார். உடனே சிவன் ஆவணிமாத சதுர்த்தியன்று விநாயகரை யானை முகமும், மனித உடலும் கொண்டு படைத்தார். விநாயகரை கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் இடையே ஏற்பட்ட போரில் விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை உடைத்து கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்து அவனை மூஞ்சூறாக மாற்றி தனது வாகனமாக வைத்து கொண்டார். இதனால்தான் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபட்டால் தீராத வினை எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்