சுதந்திரப்போராட்ட வீரர் சுக்தேவின் குடும்பத்தினர் தியாகி அந்தஸ்து கொடுக்கப்படாததால் உண்ணாவிரதம்!
சுக்தேவ் குடும்பத்தினர் , பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகிய சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து கொடுக்கப்படாததால் கால வரையற்ற உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர். இந்த மூவரும், லாலா லஜாபாத் என்ற விடுதலைப் போராட்ட வீரரை அடித்துக்கொன்ற ஆங்கிலேய அரசின் துணை கண்காணிப்பாளர், சாண்டர்ஸை கொலை செய்ததால் 1931 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
இந்த மூவருக்கும் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், தியாகி அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்பதால், 87 வது நினைவு நாளான இன்று உண்ணாநிலைப் போராட்டத்தைத் துவங்குவதாக சுக்தேவ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தங்களுடைய கோரிக்கையை அரசு ஏற்கவில்ல்லை என்றால், காலவரையற்ற உண்ணா நிலைப் போராட்டட்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.