ஏழைப் பெண்ணின் இதய அறுவை சிகிச்சைக்கு ரூ .9.9 லட்சம் வழங்கி உதவிய முதல்வர் யோகி ஆதித்யநாத்.!

Default Image

விவசாயி மகள் இதய அறுவை சிகிச்சைக்கு தனது நிதியில் இருந்து ரூ.9.9 லட்சம் வழங்கி உதவிய முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த விவசாயி மகள்  மதுலிகா மிஸ்ராவின் அவல நிலையை அறிந்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சரியான சமயத்தில் உதவியுள்ளார்.

மதுலிகா மிஸ்ராவின் இதய அறுவை சிகிச்சைக்கு குடும்பத்தினரால் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை என்பதால் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது நிதியில் இருந்து ரூ .9.9 லட்சத்தை வழங்கியுள்ளார்.

மெதுலிகாவின் தந்தை ராகேஷ் சந்திர மிஸ்ரா என்ற விவசாயிக்கு உத்தரப்பிரதேச முதல்வர் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். மேதந்தா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான செலவுகள் மதிப்பீட்டின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தொகையை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மச்லி காவ்னில் வசிக்கும் மதுலிகாவின் இதய அறுவை சிகிச்சைக்கு   அவர் மேதாந்தா மருத்துவமனைக்குச் சென்றார் அங்கு மருத்துவர்கள் ஆகஸ்ட் -24 ஆம் தேதி அவரது அறுவை சிகிச்சை செய்யவுள்ளனர்.

குடும்பத்தினரிடம் பணம் இல்லாததால் நேற்று காலை மதுலிகா சமூக ஊடகங்களுக்கு உள்ளூர் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.யை உதவி கேட்டுள்ளார். இதைப் பற்றி அறிந்த உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் ஏற்று கொண்டார்.

இதற்கிடையில்  மதுலிகாவின் தாய் பல வருடங்களுக்கு முன்பு காலமானார். அவரது தந்தை ஒரு விவசாயி என்று முதல்வருக்கு தகவல் கிடைத்த பின் இந்த நிதியை அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்