கை செலவுக்காக தான் சினிமாவுக்கே வந்தேன்…!மனதுக்குள் எப்போதும் ஆன்மீக உணர்வுகள்…?
நடிகை ரகுல்பிரீத்சிங் மனதுக்குள் எப்போதும் ஆன்மீக உணர்வுகள் இருப்பதால் எனக்கு நல்ல விஷயங்கள் தானாகவே அமைந்து விடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
நடிகை ரகுல்பிரீத் சிங் சூர்யா நடிக்கும் படத்தின் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். கார்த்தியுடன் அவர் நடித்த தீரன் ஹிட்டானது. இதனால் ராசியான நடிகை என்று பெயர் வாங்கி தமிழிலும் அதிக படங்களில் புக் ஆகி வருகிறார்.
நடிகை ரகுல்பிரீத் சிங் கூறுகையில், சிறுவயதில் ஆன்மீக விசயங்கள் பற்றி பல புத்தகங்களை படிப்பேன். இதனால் மனதுக்குள் எப்போதும் ஆன்மீக உணர்வுகள் இருப்பதால் எனக்கு நல்ல விசயங்கள் தானாகவே அமைந்து விடுகிறது.
நடிகையாக வேண்டும் என்று எந்த பிளானும் இருந்ததில்லை. கை செலவுக்காக தான் சினிமாவுக்கே வந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.