ஆன்லைன் வகுப்பால் நடந்த விபரீதம்.! தற்கொலை செய்து கொண்ட மாணவன்.!

Default Image

ஆன்லைன் வகுப்பில் எடுக்கும் பாடங்கள் புரியாததால் படிக்காமல் இருந்த 10ம் வகுப்பு மாணவனை ஆசிரியரும், பெற்றோரும் திட்டியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தேனியில் ஆண்டிப்பட்டியில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மகன் அபிஷேக். இவர் திண்டுக்கல் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் .

தற்போது ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் பாடங்கள் படித்து வரும் அபிஷேக் ஆசிரியர் சொல்லி கொடுக்கும் பாடங்கள் எதுவும் புரியவில்லையாம். இதனால் சரியாக படிக்க இயலாமல் போன அபிஷேக்கை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் திட்டியுள்ளனர். அவர்கள் திட்டியதால் மனமுடைந்த அபிஷேக் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அதனையடுத்து உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பெற்றோர்களிடம் ஆண்டிப்பட்டி போலீசார் ஒப்படைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்