அமெரிக்கா ஐ.நா.சபை தலைமையகத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் உரை!
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நியுயார்க்கில் உள்ள ஐநா.சபை சார்பில் அதன் தலைமையகத்தில் நடைபெற்ற நீர்வளம் தொடர்பான மாநாட்டில் ஈஷா யோகா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் உரை நிகழ்த்தினார். இந்தியாவில் காவிரி உள்ளிட்ட நதிகளுக்கு நீடிக்கும் ஆபத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
நதிகளைக் காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். அடுத்து வரும் தலைமுறைகளுக்கு பசுமையான வயல்களையும் பாய்ந்தோடும் ஆறுகளையும் அளிக்க வேண்டும் என்றும் ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.