பெண் மாஜிஸ்திரேட்டுக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை….! தனியார் நிறுவன மேலாளர் கைது!
தனியார் நிறுவன மேலாளர் சேலத்தில் பெண் மாஜிஸ்திரேட்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்சீப் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டாக பணியாற்றும் ஒருவர், சேலத்தில் இருக்கும் தனது கணவரை பார்ப்பதற்காக ரயிலில் சென்றார். அந்த ரயிலில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றும் சேலம் பெரமனூரை சேர்ந்த ராஜகோபால் என்பவரும் பயணம் செய்தார். இந்நிலையில் அவர் மாஜிஸ்திரேட்டுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி மாஜிஸ்திரேட் சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசில் அளித்த புகாரின் பேரில் ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.