சுஷாந்த் சிங் மரண வழக்கு விசாரணை.. இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.!
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான விசாரணையை பாட்னாவில் இருந்து மும்பை காவல்துறைக்கு மாற்றக் கோரிய ரியா சக்ரபர்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கில் அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் தற்கொலைக்கு காரணம் எனவும், இவர்தான் தற்கொலைக்கு தூண்டினார் என பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார். மேலும், சுஷாந்த் சிங் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.15 கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது எனவும் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் தொடர்பான விசாரணையை பாட்னாவில் நடைபெற்று வருகிறது. அந்த விசாரணையை மும்பை காவல்துறைக்கு மாற்றக் கோரிய ரியா சக்ரபர்தி மனு தாக்கல்செய்தார்.
அந்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகிறது.