2018 ராஜ்யசபா தேர்தல்:தொடங்கியது ஓட்டுப்பதிவு …!
இன்று(மார்ச் 23) உத்தர் பிரதேஷ் , கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 25 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அருண் ஜெட்லி, ஜெயா பச்சன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.நாடு முழுவதும் 58 ராஜ்யசபா இடங்கள் காலியாக இருந்தன. அவற்றில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஜவடேகர் உட்பட 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 25 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர் பிரதேஷ்யில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு அருண் ஜெட்லி, ஜெயா பச்சன் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாடு முழுவதும் 58 ராஜ்யசபா இடங்கள் காலியாக இருந்தன. அவற்றில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஜவடேகர் உட்பட 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 25 இடங்களுக்கு இன்று காலை 9 மணிக்கு துவங்கி ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது.மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.