தமிழகத்தில் கொரோனா மட்டுமின்றி பிற நோயால் பாதிக்கப்பட்டு 108 பேர் உயிரிழப்பு.!
தமிழகத்தில் 3- ம் நாளாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120- ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,49,654 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 121 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 120 பேரில், தனியார் மருத்துவமனையில் 32 பேரும், அரசு மருத்துவமனையில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 108 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.