பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக அரசு இயங்கி வருகிறது – திமுகவில் இணைந்த லட்சுமணன் பேட்டி
பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக அரசு இயங்கி வருகிறது என்று திமுகவில் இணைந்த லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள காட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.ஒரு சிலர் தாங்கள் இருக்கின்ற கட்சியிலே பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்று கூறி மாற்று கட்சிக்கு செல்கின்றனர்.
இதனிடையே நேற்று அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்.இதன் பின்னர் லட்சுமணன் பேசுகையில்,வலிமையான தலைமையின் கீழ் தமிழகத்தில் வலுவான அரசு அமைய வேண்டும் என்பதால் திமுகவில்சேர்ந்துள்ளேன் . பாஜகவின் கட்டுப்பாட்டில்தான் அதிமுக அரசு இயங்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.