உடுமலை கொலை வழக்கு – தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.!
உடுமலை கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனை குறைப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் – கவுசல்யா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2016-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இந்தக் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் கடந்த 2017 டிசம்பரில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் கவுசல்யாவின் தாய் உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, தூக்கு தண்டனை பெற்ற 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டதுடன், மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனை குறைப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.