தளபதி படத்தில் நடிக்க மறுத்த ஜோதிகா.! காரணம் இதுதானாம்.!
தளபதி விஜய் நடித்த மெர்சல் படத்தில் நித்யா மேனன் கதாபாத்திரத்திற்கு முதலில் பேசப்பட்டது ஜோதிகாவிடம் தான் என்று கூறப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டு தீபாவளி ட்ரீட்டாக விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மெர்சல். அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. விஜய் அவர்கள் மூன்று கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தில் நித்யா மேனன், சமந்தா, மற்றும் காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
இதில் நித்யா மேனன் கதாபாத்திரத்தில் முதல் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியது ஜோதிகாவிடம் தானாம். ஆனால் ஜோதிகா படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். ஏனெனில் படத்தின் ஸ்கிரிப்ட் குறித்து அட்லியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அவரது அந்த கேரக்டர் மீது இருந்த வேறுபாட்டின் காரணமாக தான் படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.