கதவை திறந்தது பிசிசிஐ…! முகமதுசமிக்கு மீண்டும் ஜாக்பாட்..!ஐ.பி.எல் போட்டி ஓகே…! ‘பி’ க்ரேட் ஒப்பந்தம் ரூ.3 கோடி…!
‘பி’ க்ரேட் ஒப்பந்தத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை,கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. இதனால், ஐ.பி.எல் போட்டியில் ஷமி பங்கேற்க இருந்த சிக்கல் விலகியுள்ளது.
முகமது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான், கடந்த சில நாட்களுக்கு முன் ஷமி மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் ஒன்றாக, பாகிஸ்தான் நபரிடம் இருந்து மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட பணம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஷமியின் ஒப்பந்தத்தை கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்தது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடந்த ஊழல் தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி நீரஜ் குமாரை, நிர்வாகக் குழு கேட்டுக் கொண்டது.
அதன்படி விசாரணை நடத்திய நீரஜ் குமார், தனது அறிக்கையை பிசிசிஐ நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு, பிசிசிஐ-ன் ஊழல் தடுப்பு பிரிவி தலைமை அதிகாரி நீரஜ் குமார் மற்றும் முன்னாள் டெல்லி காவல் ஆணையரிடம், ஷமி வழக்கை விசாரிக்க வேண்டுகோள் விடுத்திருந்தோம். அவர்களும் ஷமி வழக்கை தீவிரமாக விசாரித்து எங்களிடம் அறிக்கையை சமர்த்துள்ளனர். அதனை ஆய்வு செய்தில், ஷமி பிக்சிங்கில் ஈடுபடவில்லை. மேலும், அவரது வழக்கில் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இதனால் பிசிசிஐ அவரை ‘பி’ க்ரேட் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ‘பி’ க்ரேட் ஒப்பந்தத்தால் ஷமிக்கு, ஓராண்டுக்கு ரூ.3 கோடி கிடைக்கும். . பிக்சிங்கில் இருந்து விடுபட்டதை அடுத்து, ஐ.பி.எல்-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாட முகமது ஷமிக்கு விளையாட பிசிசிஐ அனுமதித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.