ஜம்முவில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டு கொலை.. மொத்தம் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.!
ஜம்மு காஷ்மீரின் பரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரீரி மத்திய ரிசர்வ் படை மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் நடந்த மோதலில் மேலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். நேற்று முதல் பரமுல்லா மாவட்டத்தில் மோதல் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இதனால், மொத்தம் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடன் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவையை மீட்கப்பட்டன. மேலும், தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.