அரசப் பயங்கரவாதத்தில் உயிரிழந்த 13 பேரின் ஈகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி – சீமான்

Default Image

மக்களின் அறப்போராட்டத்திற்கும், அரசப் பயங்கரவாதத்தில் உயிரிழந்த 13 பேரின் ஈகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என சீமான் ட்வீட்.

வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆலையை திறக்க அனுமதியில்லை என்றும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். எனவே இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கணைப்பாளர்  சீமான் ஒரு பதிவை வெளிட்டுள்ளார் அதில், மக்களின் அறப்போராட்டத்திற்கும், அரசப் பயங்கரவாதத்தில் உயிரிழந்த 13 பேரின் ஈகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. இதேபோன்று, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற மக்கள்திரள் அறவழிப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கும் விரைவில் நீதி கிடைத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்