மகாராஷ்டிரா :சிறைகளில் உள்ள 1,043 கைதிகள், 302 சிறை ஊழியர்களுக்கு கொரோனா.!
மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளில் இதுவரை 1,043 கைதிகளும், 302 சிறை ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளிடையே கொரோனா பரவலை தடுக்கவும், நெருக்கத்தை குறைக்கவும் உயர் அதிகாரக் குழுவின் பரிந்துரைகளின்படி 10,480 கைதிகளில் 2,444பேர் பரோலிலும், மீதமுள்ளவர்கள் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மகாராஷ்டிராவில் உள்ள சிறைகளிலுள்ள கைதிகளில் 1,043 பேரும், சிறை ஊழியர்களில் 302 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சிறைத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 சிறை கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனாவிலிருந்து 818 கைதிகள் மற்றும் 271 சிறை ஊழியர்கள் மீண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் திங்களன்று மட்டும் புதிதாக 8,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,04,358 ஆக உயர்ந்துள்ளது.