PM CARES நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி.!

பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக விருப்பமுள்ளவர்கள் பி.எம். கேர்ஸில் நிதி அளிக்கலாம் என்று தெரிவித்தார். கொரோனா போன்ற திடீரென ஏற்படும் பேரிடர் பிரச்னைகளை சமாளிக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கவும் உருவாக்கிய இந்நிதியத்திற்கு, தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் நன்கொடை அளித்து உள்ளனர்.
இந்நிலையில், பி.எம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்றக் கோரி, சி.பி.சி.எல் எனும் தனியார் தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தது. பின்னர் மனுதாரர் தரப்பில், பி.எம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளிப்பவர்களைப் பற்றி எந்த சந்தேகம் இல்லை. ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பி.எம் கேர்ஸ் நிதி இருக்கிறது என்று கூறப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்தபோது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பி.எம்.கேர்ஸ் நிதி இருப்பதாக சிபிசிஎல் என்ற தனியார் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025