வெற்றி! வெற்றி! ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை- தூத்துக்குடியில் வெடி வெடித்து கொண்டாட்டம்.!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தூத்துக்குடியில் மக்கள் வெடி வெடித்து கொண்டாட்டம்.
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ல் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிசூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததை அடுத்து 28 ஆம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தூத்துக்குடியில் மக்கள் வெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு முன்பு போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.