கொரோனாவை விட 10 மடங்கு வேகத்தில் பரவும் புதிய வைரஸ்.. மக்களை எச்சரிக்கும் மலேசியா..!
உலகம் தற்போது கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த வைரஸில் இருந்து விடுபட பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸை விட 10 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடிய புதிய வைரஸ் ஒன்றை மலேசியா கண்டுபிடித்துள்ளனர். D614G என கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக பரவும்.
தமிழகத்தில் இருந்து மலேசியா சென்ற ஒரு நபருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவருக்கு இந்த D614G என்ற வைரஸ் இருப்பதை மலேசியா சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், மலேசியாவில் உள்ள மற்றொரு நபருக்கும் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக எளிமையாக பரவக்கூடியது என மலேசியா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே இந்த வைரஸ் பாதிப்பால் எகிப்து மற்றும் நமது அண்டை நாடான பாகிஸ்தானும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மலேசியாவிலும் D614G என்ற வைரசால் பாதிக்கப்ட்டுள்ளது.
இதனால், மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், இதற்கு மக்களின் ஒத்துழைப்பை வேண்டும் எனமலேசியா அரசு அறிவுறுத்தி உள்ளது.