மத்திய இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்
மத்திய இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வடக்கு சத்தீஸ்கர், கிழக்கு மத்தியப் பிரதேசம், மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மற்றும் தெற்கு குஜராத்தில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என மத்திய நீர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வெள்ள முன்னறிவிப்பு ஐஎம்டி தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கிழக்கு ராஜஸ்தானிலும், ஆகஸ்ட் 18 ஆம் தேதி உத்தரகண்ட் பகுதிகளிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என ஐஎம்டி கணித்துள்ளது. இதற்கிடையில் குஜராத் மாநிலம், மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய நாடுகளில் பரவலான மழை பெய்யும்.