இந்தியத் தேர்தல்களில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா தலையீடுகள், தாக்கங்கள்?தடுப்பது எப்படி?
வரும் 27ம் தேதி தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல்களில் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் தலையீடும் தாக்கமும் இருந்ததா என்பதை ஆராய சிறப்புக் கூட்டம் ஒன்றை கூட்ட உள்ளது. பேஸ்புக்கின் பலகோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி, அதை அமெரிக்கத் தேர்தல்களில் பயன்படுத்தியதாக அனாலிட்டிக்கா நிறுவனம் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் சமூக ஊடகங்கள் வாயிலாக மோடி அலையை ஏற்படுத்த இந்நிறுவனம் உதவியதாகவும் சர்ச்சை எழுந்தது. இது குறித்து ஆய்வு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது. தேர்தலில் தாக்கம் ஏற்படுத்தும் எந்த ஒரு விவகாரமும் தேர்தல் ஆணையத்தின் ராடாருக்குள் வந்துவிடும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.