இன்று கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு மீது முடிவு!
டெல்லி உயர்நீதிமன்றம், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று முடிவை தெரிவிக்க உள்ளது. கடந்த 16ம் தேதி விசாரணையை அடுத்து ஜாமீன் மனு மீதான உத்தரவை நீதிபதி எஸ்.பி. கார்க் ஒத்திவைத்திருந்தார்.
அரசியல் செல்வாக்குடைய கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் கொடுத்தால் அவர் ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என்று சிபிஐ தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கார்த்தியின் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்று வாதிட்டனர். இவ்வழக்கில் வேறுயாரும் கைது செய்யப்படவில்லை என்பதையும் கார்த்தி தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.