அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் – உபயோகப்படுத்தாத ஊழியர்கள் மீது நடவடிக்கை – ராதாகிருஷ்ணன்!

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை பெற்றுக்கொண்டு, உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று (ஆகஸ்ட் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறந்த டிஜிட்டல் ஒளிபரப்பு கேபிள் டிவி சேவையை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்கும் விதமாக 35 லட்சத்து 97 ஆயிரத்து 479 செட்டாப் பாக்ஸ்களை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் வழங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 7 லட்சத்து 60 ஆயிரத்து 470 செட்டாப் பாக்ஸ்கள் இன்னும் செயலாக்கபடாமலே உள்ளதாக தெரிகிறது.
எனவே தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை வழங்க கூடிய உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இந்த செட்டாப் பாக்ஸ்களை உடனடியாக செயலாக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு செய்யாவிட்டால் மீண்டும் அதை நிறுவனத்திடமே திருப்பி வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. செட்டாப் பாக்ஸை நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு செயலாக்கம் செய்யாமல் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பான குற்றம். எனவே செயலாக்கம் செய்ய வேண்டும் அல்லது நிறுவனத்திடம் திருப்பி வழங்கப்பட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025