ஒரு ட்விட்க்கு நடுங்கிய ஹார்டிக் பாண்டியா …!சூட்டை தணிக்கும் விதமாக விளக்கம் கொடுத்த பாண்டியா …!
ராஜஸ்தான் நீதிமன்றம் அம்பேத்கருக்கு எதிராக ட்வீட் செய்த கிரிக்கெட் வீரர் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
அம்பேத்கர் பற்றி நான் இழிவான கருத்துக்களை பதிவிட்டுள்ளேன் என்று சமூக வலைதளங்களில் இன்று கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. என்னுடைய ட்விட்டரில் அப்படியொரு கருத்தை நான் பதிவு செய்யவில்லை என்று இந்தத் தருணத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கி வேறு யாரோ இந்தக் கருத்தை பதிவிட்டுள்ளார்கள். நான் என்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தை (@hardikpandya7) மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.
இதற்கு விளக்கம் அளித்த பாண்டியா , அம்பேத்கர் மீதும், இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் நாட்டில் உள்ள பல்வேறு சமுதாயத்தினர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தியா என்னுடைய தாய் நாடு என்று சொல்லும் போது, மற்ற சமுதாயங்களை சேர்ந்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். என்னுடைய ரசிகர்களுடன் இணைந்திருப்பதற்காகவே நான் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறேன். தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்களில் நடக்கும் இதுபோன்ற தவறுகளை கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது.
இதுதொடர்பான நான் தேவையான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை நீதிமன்றத்தில் சமர்பிப்பேன். என்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் யாரோ இந்தச் செயலை செய்துள்ளார்கள் என்பதையும் தெரிவிப்பேன். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் நாட்டில் நிறைய பிரபலங்களுக்கும் உள்ளது” என்று ஹார்டிக் பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.